களனி மாணவர்களுக்காக ஜ’புர மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் போது, பெலிஸாரினால் மேற்கொள்ளப்படும் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் கைதுசெய்யப்படுதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் ஊடாக நேற்று ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதன்போது, பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

அத்துடன், 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.