(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டில் உள்ள 15 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் 35 பேர் ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திலும்,16 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் 13 பேர் கம்பஹா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் தொடர்ந்தும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.