(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் சுதந்திர கட்சியை நாசமாக்க முற்படும் முயற்சியை தோற்கடிப்போம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
“..ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு சுதந்திர கட்சியின் 95 வீதமான அமைப்பாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் மிக புத்திசாதுரியத்துடன் செயற்படுமாறு வேண்டுகிறேன்..” எனவும் அவர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அறிக்கை