மங்கள விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, அவர் நிதி அமைச்சராக இருந்த காலம் குறித்து விசாரணைகளை நடாத்துமாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இது தொடர்பில் பதிவொன்றினையும் பதிவிட்டு அதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு என ஹேஷ் டேக் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.