பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு பரிந்துரை..!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது பதவி மறுசீரமைப்பு தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும் கட்சியின் முக்கிய பதவி மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.