பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான தீர்மானம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் நாளை(03) அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே தேர்தல் திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.