(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடாத நிலையில் கட்சி ஆதரவாளர்களை குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று(05) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய குமார வெல்கம,
“… சந்திரிகா பண்ராநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி காண்பிக்குமாறு தயாசிறி ஜயசேகரவிடம் கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் எனவும், அதற்காகவே சந்திரிகா குமரதுங்கவை நிகழ்வுக்கு அழைத்தேன். எதிர்வரும் தேர்தலில் எதிர்பார்க்கப்படும் முடிவு கிடைத்தால் தயாசிறி ஜயசேகரவை காதினால் பிடித்து வெளியில் வீசவும் தயார்…” எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளளார்.