மேலும் இருவர் பூரணமாக குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தற்போது வரை 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரை 238 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.