ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண மன்னிப்பு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வுக்கு ஜனாதிபதியின் விஷேட மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2021 ஜனவரியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக இலங்கை நடிகரும் அரசியல்வாதியுமான அவர் நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் நிபந்தனை யுடன் கூடிய மன்னிப்புக்கான ஆவணத்தில் ஜனாதிபதி யின் ஒப்புதலுடன் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி யின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடக் கூடாது என முன்னாள் எம்.பி.க்கு மன்னிப்பு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்தது

இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பு 34 (1) (ஆ)* பிரிவின் கீழ் ஒன்று என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

அரசியலமைப்பின் 34 (2) ஆவது பிரிவின் கீழ் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால், அவரது ஜனநாயக உரிமைகள் மீண்டும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய முழுமையான மன்னிப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் வழங்க வேண்டும் என தெரிவித்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“இந்த மன்னிப்பில் அரசியல் உரிமைகள் இல்லை” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் அடுத்த இடத்தில் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படுவார் எனவும், அதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.