(FASTNEWS|COLOMBO) – தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்திலுள்ள மூன்று பீடங்கள் நாளை(17) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்பிடி மற்றும் கடல்வள பீடம் ஆகிய நாளை இவ்வாறு ஆரம்பிக்கப்பட உள்ளன.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து குறித்த இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அமைதியின்மையுடன் செயற்பட்டதோடு, பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளமையினால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வெல்லமடம வளாகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.