(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
மக்கள் தன்னெழுச்சி போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா என பரவலாக அறியப்படும் ரனிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்குக்கு, அடையாளம் தெரியா நபர் ஒருவர் ஊடாக 50 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டதாக கூறபப்டும் விடயம் தொடர்பில் சிசிடி எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் தனது வங்கிக் கணக்கு உள்ள தனியார் வங்கிக்கும் பொலிஸாருக்கும் ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்ன முறைப்பாடு செய்ததனையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று (17) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்னவின் குறித்த வங்கிக் கணக்கு, ஜா எல கிளையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இவ்வாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பீ அறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.