வசந்த UNP இலிருந்து நீங்கினார் – அரசியல் தீர்வு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைய தயாரில்லை எனவும் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பொறுக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக தெரிவித்திருந்தார்.

நாடு எதிர்பார்த்து நிற்கும் அரசியல் தீர்மானம் ஒன்றினை இன்று(07) தான் எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இன்று(07) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.