ஓட்டமாவடி – இறக்காமம் : கொவிட் சடலங்களை புதைக்க அனுமதி

ஓட்டமாவடி – இறக்காமம் : கொவிட் சடலங்களை புதைக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை மட்டக்களப்பு – ஓட்டமாவடி, அம்பாறை – இறக்காமம் ஆகிய பகுதிகளில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததுடன், அதற்கான சுகாதார வழிகாட்டல்களும் நேற்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பு –ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை , மஜ்மா நகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட காணியில் குறித்த சரீரங்களை புதைக்கப்பதற்கான இன்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, ஓட்டமாவடி – மஜ்மா நகரிலுள்ள காணியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் சரீரங்களை இன்று புதைக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.