ஷவேந்திரவும் குத்திக் கொண்டார்

ஷவேந்திரவும் குத்திக் கொண்டார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவத் தளபதியும், கொவிட் ஒழிப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று(06) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர் இதனைப் பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் இராணுவத் தளபதி தடுப்பூசியை இன்று பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.