இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை

இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் |  மியன்மார்) – மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளதாக, மியன்மார் தொழிற்சங்க கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டுள்ள நிலையில், ஆங்சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மியன்மார் மக்களினால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மியன்மார் பாதுகாப்பு பிரிவினரின் தாக்குதலில் இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.