அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் பைடன்

(ஃபாஸ்ட் நியூஸ் |  வாஷிங்டன்) – நான் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியாவேன் என்ற நம்பிக்கை உள்ளது என ஜோ பைடன் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்;

“..நான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு மக்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதே எனது இலக்கு. எனது எதிர்பார்ப்பும் அதுதான்.

நான் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்க ஜனதிபதியாவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கமலா ஹாரிஸ் 2-வது முறையாக அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் முழுமையாக எதிர்பார்க்கிறேன்..” எனத் தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)