மரண தண்டனைக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றம்

மரண தண்டனைக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மரண தண்டனைக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை அடுத்து விர்ஜினியாவில் தான் அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் விர்ஜினியா பெரும்பான்மையாக உள்ள ஜனநாயக கட்சி மரண தண்டனைக்கு தடை விதிக்கும் மசோதாவை சமீபத்தில் தாக்கல் செய்தது.இந்த மசோதா மீதான விவாதத்தின் போது ‘அப்பாவி ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் வாதிட்டனர்.

‘கொடுங் குற்றங்களுக்கும் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவும் மரண தண்டனை தேவை’ என குடியரசு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எனினும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. இதையடுத்து விர்ஜினியா கவர்னர் ரால்ப் நார்தம் கையொப்பத்துடன் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விர்ஜினியாவைச் சேர்த்து 23 மாகாணங்கள் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ளன.