மாறிப் போன ‘அசுரன்’ பச்சையம்மா

மாறிப் போன ‘அசுரன்’ பச்சையம்மா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் பச்சையம்மாவாக தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகை மஞ்சுவாரியர். மூன்று பிள்ளைகளின் தாயாக, முதல் பிள்ளையை பலி கொடுத்த ஆக்ரோஷமான அம்மாவாக ‘அசுரன்’ திரைப்படத்தில் தடம் பதித்த மஞ்சுவாரியர், இளம் நாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு க்யூட் லுக்கில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Manju Warrier latest photo viral in internet - தமிழ் News - IndiaGlitz.com - oceannews2day

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த மஞ்சுவாரியர், தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்த போதே திலீப்பை மணம் முடித்து சினிமாவை விட்டு விலகினார். இதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்த மஞ்சு வாரியர், இப்போது கைவசம் பல படங்களை வைத்து கொண்டு பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் மூலம் பிரம்மாண்டமாக ரீ என்டரி கொடுத்தார் மஞ்சுவாரியர். இந்த படம் ஜோதிகா நடிப்பில் வெளியான ’36 வயதினிலே’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷன். இதனையடுத்து மஞ்சு தொட்ட அனைத்து படங்களும் ஹிட் அடிக்க தொடங்கியது. இதனால் வரிசையாக படங்களில் புக் ஆகி மறுபடியும் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)