இறுதிக்கட்ட பணிகளில் ‘வலிமை’ படக்குழுவினர்

இறுதிக்கட்ட பணிகளில் ‘வலிமை’ படக்குழுவினர்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – ‘வலிமை’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித் நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டமிட்டப்படி அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடுவதற்கான வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து, அஜித், வினோத், போனிகபூர் மூவரும் இந்த திரைப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை அஜித் முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக உருவாகி கொண்டிருக்கிறது அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்டிற்காக மாதா கணக்கில் காத்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். டைட்டில் அறிவித்ததோடு சரி, அதன் பிறகு திரைப்படம் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் வெளியாகததால், ட்விட்டரில் அடிக்கடி போனி கபூரை டேக் செய்து, ‘வலிமை’ படத்தின் அப்டேட்டையும் கேட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் ‘வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் பிறந்தநாளான மே ஒன்று ரிலீஸ் ஆகும் என அறிவித்தார் போனிகபூர்.

அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போனி கபூர், ‘வலிமை’ படம் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குடும்பப் படமாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். இதனால் குடும்பத்துடன் ‘வலிமை’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் அவுட் கட்டை பார்த்து அஜித், படம் நன்றாக வந்துள்ளதாகவும் இயக்குனர் வினோத்திடம் கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு ‘வலிமை’ திரைப்படம் செம ட்ரிட்டாக அமையும் என தெரிவிக்கின்றார் சினிமா வட்டாரங்கள்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத்தே இயக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன. அஜித்தின் அடுத்த படத்தை இயக்க சுதா கொங்கரா, சிறுத்தை சிவா, விஷ்ணுவர்தன் போன்றோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக வினோத்துடனே இணைய திட்டமிட்டுள்ளாராம் அஜித். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களில் வினோத்தின் ஒர்க் ஸ்டைல் அஜித்திற்கு ரொம்பவே பிடித்துள்ளதால் மூன்றாவது முறையாக, அவருடனே இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

COMMENTS

Wordpress (0)