நாய்களுக்கு பென்சன் : அரசின் திடீர் முடிவு

நாய்களுக்கு பென்சன் : அரசின் திடீர் முடிவு

(ஃபாஸ்ட் நியூஸ் |  போலந்து) – காவல்துறையில் பணிபுரியும் நாய்கள், குதிரைகளுக்கு பென்சன் வழங்க போலந்து அரசு திட்டமிட்டு வருகிறது.

போலந்து நாட்டில் காவல்துறை நாய்கள் ஏராளமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மீட்பு பணிகள், தேடுதல் பணிகள், போதை மருந்துகளை கண்டறிதல், வெடிபொருட்களை கண்டறிதல், ரவுடி கும்பல்களை கட்டுப்படுத்துதல் என காவல்துறை நாய்கள் பல உதவிகளை செய்து வருகின்றன.

இவ்வளவு சேவைகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே நாய்களுக்கு வழங்கப்படுகின்றன. போலந்து காவல்துறையில் சேவை செய்யும் நாய்கள் மற்றும் குதிரைகள் பணி ஓய்வு பெற்றபின் அரசு பாதுகாப்பில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

காவல்துறை மட்டுமல்லாமல் எல்லைக் காவல், தீயணைப்பு துறை ஆகியவற்றில் பணிபுரியும் நாய், குதிரைகளுக்கு இதேநிலைதான். இந்த விலங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், அரசு சேவையில் இருந்து வெளியேறும் நாய், குதிரைகளுக்கு ரிட்டயர்மெண்ட் தொகை வழங்க புதிய சட்டம் கொண்டுவர போலந்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விலங்குகளின் புதிய எஜமானர்கள் சந்திக்கும் செலவுகளை சமாளிக்க முடியும் என்பது அரசின் ஐடியா.

மேலும், அதிகாரிகளை போலவே நாய் மற்றும் குதிரைகளுக்கு பென்சன் தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது போலந்தில் சுமார் 1,200 நாய்கள் மற்றும் 60 குதிரைகள் அரசு பணிகளில் சேவை செய்து வருகின்றன.