இந்திய லெஜண்ட்ஸ் அணியில் கொரோனா கொத்தணி

இந்திய லெஜண்ட்ஸ் அணியில் கொரோனா கொத்தணி

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்திய லெஜண்ட்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிரிக்கெட் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் மூத்த வீரர்களை உள்ளடக்கிய இந்தியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் பங்கேற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன்பிறகு வீரர்கள் அனைவரும் தங்களில் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், சச்சின் டெண்டுல்ரகர் வெளியிட்ட ட்வீட்டில், தனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். குடும்பத்தில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்திய லெஜண்ட்ஸ் வீரர் யூஷப் பதானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக வீரர் பத்ரிநாத்திற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “நான் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளும் உள்ளன. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய லெஜண்ட்ஸ் அணியில் தற்போதுவரை மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலருக்கும் தொற்று உறுதியாகலாம் எனவும் கூறப்படுகிறது. சாலை பாதுகாப்பு கிரிக்கெட் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.