ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தவேண்டும் – ஈராக்கின் பிரதமர்

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தவேண்டும் – ஈராக்கின் பிரதமர்

சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள், விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சினையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துவரும் ஈராக்கின் பிரதம மந்திரி ஹைதர் அல்-அபாதி ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தவேண்டும் என கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசுகையில் “இந்த பிரச்சனையில் ரஷ்யா முக்கிய பாத்திரத்தை ஏற்கவேண்டும் என விரும்புகிறோம். ஆமாம், அமெரிக்காவை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை ரஷ்யா ஏற்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிரியாவில் ரஷ்யா போரில் ஈடுபட்டிருப்பதால் கையை பிசைந்து கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு மற்றொரு தலைவலியாக. அதன் நீண்ட நாள் கூட்டாளியான ஈராக் தற்போது ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளது.

 

(riz)