கொரோனாவினால் சீரழிந்த நாடுகள் இவைதான்

கொரோனாவினால் சீரழிந்த நாடுகள் இவைதான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸுடன் உலக நாடுகள் போராடி வருகின்றன. முதலில் ஊரடங்கு விதித்து பல இழப்புகளை சந்தித்து பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடிக்கு இதுவரை முடிவு கிடைக்கவில்லை. இதற்கிடையே பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டன. கொரோனாவால் பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் இவைதான்.

இத்தாலி
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. வேலைவாய்ப்பு இழப்பு, கடன் என இத்தாலியர்களும் பண நெருக்கடியில் சிக்கிக்கொண்டனர்.

​அமெரிக்கா
கொரோனாவால் அதிகபட்ச பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்கா. வேலைவாய்ப்பு இழப்பு, உயிர்பலி எண்ணிக்கை மிகுதி என பல பிரச்சினைகளால் அமெரிக்கா திணறியது.

​பிரிட்டன்
முதல் கொரோனாவை விட உருமாறிய கொரோனாவால் திக்குமுக்காடி போய்விட்டது பிரிட்டன். இப்போது வரை பிரிட்டனில் கொரோனா பரவல் அடங்கியபாடில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் பிரிட்டன் அரசு வழங்கியது. இதனால் ஏராளமாக செலவானது.

​தென்னாப்பிரிக்கா
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் மிக கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டது. மது, சிகரெட் விற்பனைக்கு கூட தடை விதிக்கப்பட்டது. ஏராளமான தொழில்கள் நிரந்தரமாகமூடப்பட்டன. பலர் வேலைவாய்ப்புகளை இழந்தனர்.

​இந்தோனேசியா
கொரோனாவால் இந்தோனேசியா சந்தித்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 150 கோடி டாலரை கடனாக வழங்கியுள்ளது ஆஸ்திரேலியா. அந்நிய முதலீட்டாளர்கள் நாட்டை விட்டே வெளியேறினர். மேலும் வேலைவாய்ப்பு இழப்பால் கூடுதல் நெருக்கடி.

இந்தியா
கொரோனா பரவுவதற்கு முன்பாகவே இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சரிந்திருந்தது. கொரோனாவால் இன்னும் பலத்த அடி வாங்கியது இந்திய பொருளாதாரம். ஏற்கெனவே வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சினைகளால் தவிக்கும் இந்தியாவுக்கு கொரோனா பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பிரான்ஸ்
ஐரோப்பிய நாடுகளை கொரோனா கடுமையாக தாக்கியது. அதில் பிரான்ஸ் ஒன்றும் விதிவிலக்கில்லை. இதற்கிடையே பிரிட்டனில் பரவிய புதிய கொரோனா பிரான்ஸ் வரை வந்துவிட்டது. பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு, கடன் என பல பிரச்சினைகளில் பிரான்ஸ் மக்கள் சிக்கிக்கொண்டனர்.

ஸ்பெயின்
ஐரோப்பாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு ஸ்பெயின். பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டன. சிறு தொழில்கள் தத்தளித்தன. ஸ்பெயின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறையை கொரோனா சூறையாடியது.

போர்ச்சுகல்
போர்ச்சுகலில் கொரோனா தொற்று கிடுகிடுவென மிக வேகமாக பரவியது. போர்ச்சுகல் நாடு சுற்றுலா துறை, ஹோட்டல் துறை போன்ற கேளிக்கை துறைகளை அதிகம் நம்பியிருக்கிறது. கொரோனாவால் உலகம் முழுக்க சுற்றுலா துறை பாதிக்கப்பட்டதால் போர்ச்சுகல் பொருளாதாரம் முடங்கியது. மேலும் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.

​பிரேசில்
உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் முன்னணியில் இருக்கிறது. வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் சுமை என பல பிரச்சினைகளால் பிரேசில் திணறி வருகிறது.

COMMENTS

Wordpress (0)