இந்தியாவின் பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதியை பாகிஸ்தான் அமைச்சரவை நிராகரிப்பு

இந்தியாவின் பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதியை பாகிஸ்தான் அமைச்சரவை நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  இஸ்லாமாபாத்) – இந்தியாவில் இருந்து, பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதி செய்ய, பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி முன்வைத்த பரிந்துரையை, அந்நாட்டு அமைச்சரவை நிராகரித்தது.

ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது. இரு நாட்டுக்கு இடையிலான வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த, பாக்., பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி கூட்டத்துக்கு பின், இந்தியாவில் இருந்து, பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடை, விலக்கிக் கொள்ளப்படுவதாக, பாக்., நிதி அமைச்சர் ஹமத் அசார் அறிவித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகே, நடைமுறைக்கு வருவது வழக்கம்.அதன்படி, பாக்., பிரதமர் இம்ரான் கான் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.இதில், ”ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெறும் வரை, அவர்களுடனான உறவு சுமுகமாக தொடராது. எனவே, இந்தியாவுடன் வர்த்தக உறவை தொடர வாய்ப்பில்லை,” என, பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)