பாகிஸ்தான் அணிக்கு தடையா?

பாகிஸ்தான் அணிக்கு தடையா?

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு (பி.எப்.எப்.,) கடந்த மூன்று ஆண்டுகளாக சிக்கலில் உள்ளது. இங்கு அஸ்பாக் ஹூசைன் தலைமையிலான நிர்வாகிகள் தேர்வு செல்லாது என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) அறிவித்தது. இதுகுறித்து பல்வேறு வழக்குகள் நடந்தன. முடிவில் பி.எப்.எப்., ஐ நிர்வகிக்க ‘பிபா’ சார்பில் 2019ல் குழு அமைக்கப்பட்டது. இதன் சார்பில் வரும் ஜூன் மாதம் நிர்வாகிகள் தேர்தல் நடக்க இருந்தது.

திடீர் திருப்பமாக அஸ்பாக் தலைமையிலான குழுவினர் பி.எப்.எப்., தலைமை அலுவலக கதவை உடைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்விஷயத்தில் பாகிஸ்தான் அரசு தலையிட்டு, தீர்வு காணவில்லை என்றால் பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு நீண்ட கால தடை விதிக்கப்படும் என ‘பிபா’ எச்சரித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)