உயிர்த்த ஞாயிறு : பலத்த பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு : பலத்த பாதுகாப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும், தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமாறும் சகல பாதுகாப்பு தளபதிகளுக்கும் குறித்த அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் சிவில் குழுக்களின் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏதேனும், சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் உடனடியாக உரிய தரப்பினருக்கு அறியப்படுத்துமாறு, ஆராதனைகளில் கலந்து கொள்வோர் மற்றும் தேவாலயங்களில் நியமிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குழுவிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 12,047 உறுப்பினர்கள் கடமைகளில் ஈடுப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.