ரஜினி ‘மகளுக்கு’ கொரோனா

ரஜினி ‘மகளுக்கு’ கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நிவேதா தோமஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் முதல் அலையில் தப்பியவர்கள் எல்லாம் தற்போது இரண்டாவது அலையில் சிக்கியுள்ளனர். சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே கொரோனா பாதிப்பு குறித்த பேச்சாகத் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்படும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தினமும் ஏதாவது ஒரு பிரபலம் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்த நிவேதா தோமஸுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நிவேதா தாமஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது,

“எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. இதையடுத்து நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். முழுமையாக குணமடைந்துவிடுவேன் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. அதிலும் குறிப்பாக எனக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவுக்கு நன்றி. தயவு செய்து அனைவரும் பத்திரமாக இருங்கள். மாஸ்க் அணியவும்” என்று தெரிவித்துள்ளார்.

 

COMMENTS

Wordpress (0)