மூன்று ஆண் குறிகளுடன் பிறந்துள்ள குழந்தை

மூன்று ஆண் குறிகளுடன் பிறந்துள்ள குழந்தை

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஈராக்) – மருத்துவ வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு குழந்தை மூன்று ஆண் குறிகளுடன் பிறந்துள்ளது. ஈராக்கில் டுஹோக்கில் இருந்து வந்த மூன்று மாத குழந்தைக்கு ஆண்குறிக்கு அருகில் வீக்கம் இருந்ததால் பெற்றோரால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

டாக்டர்கள் அந்த குழந்தையை பரிசோதித்தப்போது அந்த குழந்தைக்கு மேலும் இரண்டு ஆண்குறிகள் இருப்பது தெரியவந்தது. முதன்மை ஆண்குறிக்கு மேலே ஒரு ஆண்குறியும் அதற்கு கீழே மற்றொரு ஆண்குறியும் அமைந்துள்ளது. இது ஒரு அரிய விஷயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் குழந்தை வயிற்றில் இருக்கும்போது எந்தவிதமான மாற்று மருந்தையும் பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள வில்லை. மேலும் அவர்களது குடும்ப வரலாற்றில் யாருக்குமே மரபணு பிரச்சினைகள் இருக்கவில்லை.

இந்த அரிய நிகழ்வு குறித்த செய்தியை இண்டர்நேஷனம் ஜர்னல் ஆஃப் சர்ஜரி என்ற இதழ் வெளியிட்டது. இந்த கட்டுரையை ஷாகிர் சலீம் ஜபாலி மற்றும் அயத் அகமது முகமது என்ற இருவர் எழுதியுள்ளனர். ”திரிபாலியா (மூன்று ஆண்குறி) என்பது மருத்துவ துறையில் இதுவரை நிகழாத விஷயமாகும்.

ஒவ்வொரு 5 முதல் 6 மில்லியன் பிறப்புகளில் ஒருவருக்கு இப்படியான மரபியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மருத்துவ துறையின் பதிவின்படி மூன்று ஆண்குறி கொண்டு பதிவான முதல் வழக்காக இது உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் இந்த கூடுதல் ஆண்குறிகளுக்கு சிறுநீர் குழாய்கள் இல்லை என பின்னர் கண்டறியப்பட்டது. எனவே இந்த கூடுதல் ஆண்குறிகள் தேவையற்றது என அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றினர்.