‘தளபதி 65’ இல் யோகி பாபு

‘தளபதி 65’ இல் யோகி பாபு

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் யோகி பாபு இணைந்து உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யுடன் அவர் மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா உள்பட ஒரு சில வெளிநாடுகளிலும் சென்னை உள்பட உள்நாட்டிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)