சீனாவுக்கு தாய்வான் பகிரங்க எச்சரிக்கை

சீனாவுக்கு தாய்வான் பகிரங்க எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் |  தாய்வான்) – சீனா, தாய்வான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது இராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.

சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஹாங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் தென் சீன கடலில் இராணுவ கட்டமைப்புகளை பெருமளவில் அமைத்துள்ளது.

சீனா, தாய்வான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது இராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு தாய்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து வரும், அமெரிக்கா, தாய்வானுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. மேலும் தாய்வானுடன் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த 5ம் திகதி சீனாவின் 10 போர் விமானங்கள் தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில் சீனாவுக்கு தாய்வான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா, எங்களை தாக்கினால் கடைசி வரை விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.