மும்பையை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ் அணி

மும்பையை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ் அணி

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) –2021 ஆண்டுக்கான ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 2 விக்கெட்டுகளினால் வீழ்த்தியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.

இதேவேளை, ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.