இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் சாத்தியம்

இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா-சீனா இடையே சமீபத்தில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் விரைவில் நெருக்கடிகள் ஏற்படும் என்றும் இதன் காரணமாக போர் ஏற்படும் சூழல் ஏற்படும் என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பாகிஸ்தானை ஆத்திரமூட்டும் செயல்கள் நடந்து வருவதாகவும் அதற்கு பதிலடி தரும் வகையில் சீனா உதவியுடன் பாகிஸ்தான் ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் அதனால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது போர் வரை செல்லும் என்றும் உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

COMMENTS

Wordpress (0)