தெரணியகலை தவிசாளர் விளக்கமறியலில்

தெரணியகலை தவிசாளர் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  தெரணியகலை) – கேகாலை மாவட்ட தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளரை எதிர்வரும் திங்கட் கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

அவர் இன்று பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான 477 நீர்மாணிகள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட 98 நீர்மாணிகள், தெரணியகலை பிரதேச சபை தவிசாளரின் பொறுப்பிலிருந்த நிலையில், நேற்று(16) கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)