துறைமுக நகரும் அரசியல் யாப்பும்

துறைமுக நகரும் அரசியல் யாப்பும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துறைமுக நகரானது பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது அரசியல் யாப்புக்கு முரணானது இல்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவித்தலை மேற்கொள்காட்டி டெய்லி நியூஸ் பத்திரிகை 13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் எவ்வித தடைக்கோ அல்லது விதிக்கப்படவுள்ள வரையறைகளுக்கோ குறித்த சட்ட மூலமானது முரணானது அல்ல என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இதற்கு முன்னர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர சட்டமா அதிபரை அனுப்பி அறிவுறுத்திய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)