துறைமுக நகரம் தொடர்ந்தும் சர்ச்சையில்

துறைமுக நகரம் தொடர்ந்தும் சர்ச்சையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலணித்துவ ஆட்சிக்குள் கொண்டுவரப்படமாட்டாது என்றும் இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்காது எனவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட் கப்ரால் தெரிவித்தார்.

அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது சட்டத்திற்கு உட்பட்டதாகவே ஆணைக்குழுவின் செயற்பாடுகள் காணப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்

நிதியமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

COMMENTS

Wordpress (0)