சமீரா ரெட்டிக்கு கொரோனா

சமீரா ரெட்டிக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தமிழ் திரையுலகை சேர்ந்த பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதையும் அவ்வப்போது ஒரு சிலர் பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்

அந்த வகையில் தமிழ் திரையுலகில் கடந்த 2000அம் ஆண்டுகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சமீரா ரெட்டிக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மும்பையில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் சமீரா ரெட்டிக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்
தனக்கு கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தனது குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் இதனை அடுத்து தாங்கள் மற்றும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜித் நடித்த அசல், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் உள்பட பல தமிழ் படங்களில் சமீரா ரெட்டி நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

COMMENTS

Wordpress (0)