இந்தியாவுடனான விமான சேவைகள் இரத்து

இந்தியாவுடனான விமான சேவைகள் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஹாங்காங்) – இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுடனான விமான சேவைகளை ஹாங்காங் அரசு இரத்து செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத்தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்புகள் 2.50 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தினசரி பாதிப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.

இதனால் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்து வருகின்றன. அந்த வகையில் ஹாங்காங் அரசு நாளை முதல் மே 3 வரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டு விமான சேவைகளும் இரத்தாகியுள்ளது.

COMMENTS

Wordpress (0)