பேராயரின் அழைப்பை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஆதரித்தது

பேராயரின் அழைப்பை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஆதரித்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பேராயரின் அழைப்பை ஆதரித்து இன்றைய தினம் இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துவதில் இணையுமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக இன்று காலை 8.45 மணிக்கு 2 நிமிட மௌனத்தினை கடைப்பிடிக்குமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.

“ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூற இந்த புனித ரமழான் மாதத்தில் ஒன்றிணையுமாறு நாங்கள் முஸ்லிம்களை அழைக்கிறோம்” என பிரதித் தலைவர் ஹில்மி அஹமட் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணையை விரைவுபடுத்தவும், உண்மையான குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வரவும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

“ஒரு போரின்போது கூட அப்பாவிகளைக் கொல்வதை இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ளதால் தற்கொலை குண்டுதாரிகளை முஸ்லிம் சமூகம் கண்டிக்கிறது; எனவே, தற்கொலை குண்டுதாரிகளுக்கு இஸ்லாமிய இறுதி சடங்கை முஸ்லிம் சமூகம் மறுத்தது.

தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்த ஒரு சிலரின் படுகொலைக்கான வெறுப்பு பிரச்சாரத்தில் முஸ்லிம் சமூகம் சிலரால் குறிவைக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.