எகிப்து ரயில் விபத்தில் 32 பேர் பலி

எகிப்து ரயில் விபத்தில் 32 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  எகிப்து) – எகிப்தில் இம்மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது ரயில் விபத்தில் இதுவரையில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்கள்.

தலைநகரான கெய்ரோவிலிருந்து வடக்கே மன்சௌரா நகருக்குச் சென்றபோது டூக் நகர் அருகே ஒரு புகையிரத நிலையத்தில் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.

ரயில் தடம் புரண்டமைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சாரதி,அவரது உதவியாளர் மற்றும் எட்டு ரயில் நிலைய அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எகிப்தின் ரயில்வே திணைக்களம் ஒருமோசமான பாதுகாப்பு நிலைமைகளை பதிவு செய்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை, கெய்ரோவின் வடகிழக்கில் உள்ள ஷர்கியா மாகாணத்தில் ரயில் தடம் புரண்டதில் 15 பேர் காயமடைந்தனர்.

மார்ச் 26 ஆம் திகதி அன்று, தலைநகரின் தெற்கே உள்ள சோஹாக் மாகாணத்தில் இரண்டு ரயில்கள் மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு, 185 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.