கறுமையான எதிர்கட்சியினர்

கறுமையான எதிர்கட்சியினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், கறுப்பு ஆடையணிந்து, சபைக்கு வந்துள்ளனர்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கம் வகிக்கும், பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள், கறுப்பு ஆடைகளை அணிந்திருக்கவில்லை.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களும், செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

COMMENTS

Wordpress (0)