அனைத்து விமானங்களும் இரத்து

அனைத்து விமானங்களும் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பிரிட்டனுக்கு இயக்கவிருந்த அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாநிலம் தோறும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, இந்தியாவை சிவப்பு பட்டியலில் பிரிட்டன் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரவும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லவும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)