ஜப்பான் பிரதமரின் வருகை இரத்து

ஜப்பான் பிரதமரின் வருகை இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இம்மாத இறுதியில் இந்தியா வரவிருந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பிரதமர் யோஷிஹைட் சுகா, தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். அதேபோல் பிலிப்பைன்ஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

COMMENTS

Wordpress (0)