விமலுக்கு தொடர்ந்தும் நீதிமன்றம் கட்டளை உத்தரவு

விமலுக்கு தொடர்ந்தும் நீதிமன்றம் கட்டளை உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ஸ தவறான மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்த கட்டளை உத்தரவு இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் 05 ஆம் திகதி வரை குறித்த கட்டளை உத்தரவு கொழும்பு மாவட்ட நீதிபதி நீடிக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது.

மேலும், குறித்த உத்தரவு நாட்டின் மூன்று தனியார் தொலைக்காட்சி வலையமைப்புகளுக்கும் நீதிபதி ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அமைச்சர் வீரவன்சவின் அறிக்கைகளை தங்கள் வலையமைப்புகள் வழியாக ஒளிபரப்புவதன் மூலம் விளம்பரப்படுத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்படப்பட்டுள்ளது.

மார்ச் 09 ஆம் திகதி விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாக குறிப்பிட்டு, ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த வழக்கு இன்று மீள் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)