மீறினால் 119 இற்கு அழைக்கவும்

மீறினால் 119 இற்கு அழைக்கவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக விருந்துபசாரங்கள், கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர தகவல் பிரிவுக்கு அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

போக்குவரத்து கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காலப்பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடுவது மற்றும் விருந்துபசார கொண்டாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர தகவல் பிரிவுக்கு அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு உடன் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.