கருப்பையா நிர்மலா கைது

கருப்பையா நிர்மலா கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதுடைய கருப்பையா நிர்மலா எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 50 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கருப்பையா பாலன் எனும் தெல் பாலா என்பவரின் மகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.