Pornhub மீது வலுக்கும் வழக்குகள்

Pornhub மீது வலுக்கும் வழக்குகள்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கலிபோர்னியா) – தங்கள் அந்தரங்க காணொளிகளை, தங்களின் அனுமதியின்றி ‘பார்ன்ஹப் வீடியோஸ்’ பயன்படுத்தியதாக, அந்நிறுவனத்தின் மீது 30-க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தங்களது அனுமதியை முறையாகப் பெறாமல் பார்ன்ஹப் வலைதளத்தில் தங்கள் காணொளிகளை பதிவேற்றியது தொடர்பாக, கலிஃபோர்னிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் அப்பெண்கள்.

பார்ன்ஹப் நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் மைண்ட்கீக். அந்நிறுவனம் ஒரு குற்றவியல் நிறுவனத்தை நடத்துவதாக கலிஃபோர்னியாவில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

பார்ன்ஹப் நிறுவனமோ இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது, பொறுப்பற்றது, பகுதியளவில் தவறானது என தன் செய்தியறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

பொதுவாக பார்ன்ஹப் வலைதளத்தை இலவசமாகவே பயன்படுத்தலாம், ஆனால் பயனர்கள் தரமான காணொளிக்காகவும், கூடுதல் காணொளிக்காகவும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இந்த தளத்தில் பதிவேற்றப்படும் காணொளிகள் பெரும்பாலும் சில சமூகங்களால் பதிவேற்றப்பட்டு பொதுவெளியில் பலராலும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் பதிவேற்றப்படும் காணொளிகளை மனிதர்களே மதிப்பீடு செய்வதாக அந்நிறுவனம் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.