தொலைக்காட்சிகளில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை

தொலைக்காட்சிகளில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் |  இலண்டன்) – இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர். 10 வயது குழந்தைகள் 20 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர்.

கடைகளில் வாங்கி சாப்பிடும் பார்சல் உணவுப்பொருட்கள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றில் இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

அதில் சேர்க்கப்படும் சுவை கூட்டும் பொருட்களாலும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் இரசாயனங்களாலும் உடல் நலத்துக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்துடன் பலருக்கு தேவையற்ற சதைகள் உருவாகி உடல் குண்டாகி விடுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் பருமன் மிக அதிகமாகி விடுகிறது.

இதை தடுப்பதற்கு இங்கிலாந்து அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நொறுக்கு தீனி, பார்சல் உணவு பொருட்கள் போன்றவற்றின் விளம்பரங்கள் இங்கிலாந்தில் தாராளமாக அனுமதிக்கப்பட்டு வந்தன.

உடல் குண்டாவதற்கு இவை காரணமாக இருப்பதாக இது சம்பந்தமான விளம்பரங்களை டி.வி.க்களில் ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வகை விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 60 சதவீதம் ஆக்கிரமித்துள்ளன.

இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர். 10 வயது குழந்தைகள் 20 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர்.

இது சம்பந்தமாக ஏற்கனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்து இருந்தார். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும் கொரோனா பரவல் உள்ள நேரத்தில் குண்டு உடல்காரர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.