வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில்

வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “ஸ்டென்ட்” அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.