உலக வங்கி இலங்கைக்கு பாராட்டு

உலக வங்கி இலங்கைக்கு பாராட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் கொள்முதல் நடைமுறைகளில், இலங்கை பின்பற்றும் முறைமை குறித்து, உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

கொவிட் ஒழிப்பு விசேட குழு, நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போது இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை மற்றும் முறைமை காரணமாக, தெற்காசிய நாடுகளில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை முன்னிலையில் காணப்படும் நிறுவனமாக உலக வங்கி அடையாளப்படுத்தியுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இதனை குறிப்பிட்டுள்ளார்

இதற்காக வழங்கப்படும் அங்கீகாரமாக, தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் போது, உலக வங்கியின் இணையத்தளத்தின் ஊடாகக் கொடுப்பனவுகளை செய்வதற்கான வாய்ப்பு, இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்