வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷசன் போஸ்டர் வெளியானது

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷசன் போஸ்டர் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) – இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷசன் போஸ்டர் இன்று வெளியானது.

Ajith Kumar Valimai first look motion poster | Ajith Kumar's 'Valimai' first  look motion poster out, fans say, "Is this Kollywood or Hollywood?"

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் திரைப்படம் வலிமை. இருப்பினும் கடந்த சில மாதங்களாக வலிமை படத்தின் எந்த ஒரு அடுத்தகட்ட அறிவிப்பும் வராததால் ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இதன் காரணமாக பல்வேறு பொது இடங்களிலும் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இறுதியாக படத்தின் இயக்குனர் எச்.வினோத் ஜுலை 15 அன்று வலிமை படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அறிவித்திருந்தார். மேலும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் ( motion poster ) இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.

அதன்படி 2 ஆண்டு காத்திருப்புக்கு பின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வடிவில் இன்று வெளியனாது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.